தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு: கைதட்டி கொண்டாடிய படக்குழுவினர்!
தனுஷ் நடித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அந்த படத்தின் குழுவினர் கைதட்டி சந்தோஷத்தை கொண்டாடிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் திரைப்படமான ’தி க்ரே மேன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்றது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக தனுஷ் அமெரிக்காவுக்கு சென்றார் என்பதும் தெரிந்ததே
சமீபத்தில் இந்த படத்தின் தனது பகுதியின் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய தனுஷ் தற்போது ஐதராபாத்தில் கார்த்திக் நரேன் இயக்கிவரும் ’மாறன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தனுஷ் நடித்த ’தி க்ரே மேன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து படக்குழுவினர் அனைவரும் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்தில் பணத்திற்காக கொலை செய்யும் கூட்டத்தின் தலைவனாக தனுஷ் நடித்து இருப்பதாகவும் சி.ஐ.ஏ அதிகாரி வேடத்தில் ரியான் கோஸ்லிங் நடித்து உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த திரைப்படம் மார்க் க்ரேனி என்பவர் எழுதிய நாவலை மையமாகக் கொண்டது என்பதும் அவெஞ்சர்ஸ் இயக்குனர்கள் அந்தோனி ரூசோ, ஜோ ரூசோ ஆகியோர் இந்த படத்தை இயக்கி உள்ளார்கள் என்பதும் தெரிந்ததே.
#TheGrayMan wrapped up.. @Russo_Brothers @NetflixFilm pic.twitter.com/jTUYjXRtWl
— Naganathan (@Nn84Naganatha) July 31, 2021