பாக்சிங் கற்று கொள்ளும் பிரபல நடிகை: வைரல் வீடியோக்கள்!

பாக்சிங் கற்று கொள்ளும் பிரபல நடிகை: வைரல் வீடியோக்கள்!

பிரபல தமிழ் நடிகை ஒருவர் பாக்சிங் கற்றுக்கொள்ளும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோக்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

உலக நாயகன் கமல்ஹாசன் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் அவ்வப்போது தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும், காதலர் சாந்தனு உடன் இருக்கும் ரொமான்ஸ் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருவார் என்பது தெரிந்ததே. 

அந்த வகையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பாக்சிங் கற்றுக்கொள்ளவும் வீடியோக்களை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோவில் அவருக்கு பயிற்சியாளர் ஒருவர் பாக்சிங் கற்றுக் கொடுப்பது போன்றும் அந்த பயிற்சியாளரிடம் ஸ்ருதிஹாசன் பாக்சிங் கற்றுக் கொள்வது போன்று காட்சிகள் உள்ளன.

சமீபத்தில் வெளியான ’சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்திற்குப் பின்னர் பாக்சிங் கற்றுக்கொள்ளும் ஆர்வம் பலரிடம் ஏற்பட்ட நிலையில் அவர்களில் ஒருவராக ஸ்ருதிஹாசன் இருக்கலாம் என்று ரசிகர்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர். 

ஸ்ருதிஹாசன் தற்போது தமிழில் விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES