சீனுராமசாமி-ஜிவி பிரகாஷ் படத்தின் நாயகி அறிவிப்பு!

சீனுராமசாமி-ஜிவி பிரகாஷ் படத்தின் நாயகி அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சீனுராமசாமி, ‘தென்மேற்கு பருவக்காற்று’, ’நீர்பறவை’ ’இடம் பொருள் ஏவல்’ ’தர்மதுரை’ ’கண்ணே கலைமானே’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் என்பதும் அவர் இயக்கிய விஜய்சேதுபதியின் ‘மாமனிதன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சீனுராமசாமி இயக்கும் அடுத்த படத்தில் நாயகனாக ஜிவி பிரகாஷ் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் கதை மதுரை மற்றும் அதைச்சுற்றியுள்ள நிகழ்வுகளை கொண்டது என்றும் செய்திகள் வெளியானதை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படம் சமீபத்தில் உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் நாயகி குறித்த அறிவிப்பை சீனுராமசாமி வெளியிட்டுள்ளார். அவர் தான் காயத்ரி.

விஜய்சேதுபதி நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘ரம்மி’, ‘புரியாத புதிர்’, ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’, ‘சீதக்காதி’ உள்ளிட்ட படங்களில் நடித்த காயத்ரி தான் ஜிவி பிரகாஷ் ஜோடியாக நடிக்கவுள்ளதாக இயக்குனர் சீனுராமசாமி தெரிவித்துள்ளார். சீனுராமசாமியின் முந்தைய படமான ‘மாமனிதன்’ படத்திலும் காயத்ரிதான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News