தியேட்டரும் அல்ல... ஓடிடி-யும் அல்ல... ரிலீஸ் பிளானை மாற்றிய ‘டாக்டர்’ படக்குழு

தியேட்டரும் அல்ல... ஓடிடி-யும் அல்ல... ரிலீஸ் பிளானை மாற்றிய ‘டாக்டர்’ படக்குழு

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கியுள்ள நெல்சன், அடுத்ததாக விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார்.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘டாக்டர்’. இளம் நடிகை பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில் யோகிபாபு, வினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இருக்கும் இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ரிலீஸ் பிளானை மாற்றி உள்ளார்களாம்.

அந்தவகையில், டாக்டர் படத்தை நேரடியாக டி.வி.யில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று டி.வி.யில் ஒளிபரப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாக்டர் படத்தை கே.ஜே.ஆர்.ஸ்டூடியோஸ் நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

LATEST News

Trending News