தளபதி விஜய்யின் அடுத்த திரைப்படம் 5 மொழிகளில் உருவாகிறதா! வெளியான மாஸ் தகவல்

தளபதி விஜய்யின் அடுத்த திரைப்படம் 5 மொழிகளில் உருவாகிறதா! வெளியான மாஸ் தகவல்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

மேலும் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் செட் அமைத்து நடைபெற்று வருகிறது, இதில் பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய்யின் அடுத்த 66-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பல்லி இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் தெலுங்கில் மகேஷ்பாபுவின் மகிரிஷி, ராம்சரண் நடித்த எவடு, ஜூனியர் என்.டி.ஆர். நடித்த பிருந்தாவனம், பிரபாஸின் முன்னா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் தற்போது விஜய்யின் 66-வது படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நேரடி படமாக எடுக்க திட்டமிட்டு உள்ளனர். இதன் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

LATEST News

Trending News

HOT GALLERIES