தனுஷின் 'D43' படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக்: கொண்டாடும் ரசிகர்கள்!

தனுஷின் 'D43' படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக்: கொண்டாடும் ரசிகர்கள்!

பிரபல நடிகர் தனுஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் இன்று அவர் நடித்து வரும் 43-வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று காலை 11 மணிக்கு ‘D43' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்பு இந்த போஸ்டரை தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

தனுஷின் 43வது படத்திற்கு ’மாறன்’ என்ற அட்டகாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தனுஷ் ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போஸ்டரை பார்க்கும்போதே படத்தை உடனடியாக பார்க்க வேண்டும் என்று எண்ணம் ஏற்படுவதாக தனுஷ் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

தனுஷ், மாளவிகா மோகனன் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் இருப்பதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்துவிட்டு தனுஷ் அடுத்ததாக செல்வராகவன் இயக்கும் படத்திலும் அதனை அடுத்து சேகர் கம்முலா இயக்கும் படத்திலும் நடிக்க செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES