கொண்டாட்டத்துடன் லெஜன்ட் சரவணன் அருள் படத்தில் இணைந்த பிரபல முன்னணி நடிகர்..

கொண்டாட்டத்துடன் லெஜன்ட் சரவணன் அருள் படத்தில் இணைந்த பிரபல முன்னணி நடிகர்..

தொழிலதிபர் லெஜன்ட் சரவணன் அருள், தற்போது தமிழ் திரையுலகில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார்.

அவர் நடிப்பில் உருவாகும் புதிய படத்தை, பிரபல இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்குகின்றனர். இவர்கள் இயக்கத்தில் ஏற்கனவே உல்லாசம், விசில் போன்ற படங்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் லெஜன்ட் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்துலா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். படப்பிடிப்பில் கலந்து கொண்ட யோகிபாபுவுக்கு படக்குழுவினர் கேக் வெட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இப்படத்தில் நடித்து வந்த நடிகர் விவேக் கடந்த சில மாதங்களுக்கு முன் மரணமடைந்ததால், அவருக்கு பதில் யோகி பாபு நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எதையும் படக்குழுவினர் தெரிவிக்கவில்லை, என்பது குறிப்பிடத்தக்கது. 

LATEST News

Trending News

HOT GALLERIES