கவின் நடித்த 'லிஃப்ட்' திரைப்படம் ஓடிடியில் ரிலீஸா? தயாரிப்பு நிறுவனம் தகவல்!

கவின் நடித்த 'லிஃப்ட்' திரைப்படம் ஓடிடியில் ரிலீஸா? தயாரிப்பு நிறுவனம் தகவல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நடிகர் கவின் நடிப்பில் உருவான ‘லிஃப்ட்’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது

பிக்பாஸ் கவின் மற்றும் பிகில் நடிகை அம்ரிதா ஐயர் ஆகிய இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் ‘லிஃப்ட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரப்பிரசாத் என்பவர் இயக்கத்தில், யுவா ஒளிப்பதிவில் மதன் படத்தொகுப்பில் பிரிட்டோ இசை அமைப்பில் உருவாகிய இந்த படத்தை லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது

இந்த நிலையில் ‘லிஃப்ட்’ படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாகவும் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் சமூக வலைதளங்களில் செய்தியை வந்தன. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் ‘லிஃப்ட்’ திரைப்படம் 100% பார்வையாளர்கள் அனுமதி பெற்ற பிறகு, திரையரங்குகளுக்கு மட்டுமே ரிலீஸ் ஆகும் என்றும், ஓடிடி ரிலீஸ் என்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும், தற்போது போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் எனவே ‘லிஃப்ட்’ படத்தை தியேட்டரில் ரசிகர் அனைவரும் தயாராக இருங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனை அடுத்து ‘லிஃப்ட்’ திரைப்படம் ஓடிடியில் முதலில் வெளியாகாது என்பதும் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது

LATEST News

Trending News

HOT GALLERIES