தளபதி விஜய்யின் முழு உருவச்சிலை: கன்னட ரசிகர்கள் பரிசு!

தளபதி விஜய்யின் முழு உருவச்சிலை: கன்னட ரசிகர்கள் பரிசு!

தளபதி விஜய்க்கு தமிழகத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள் என்றும் தமிழகத்தில் மட்டுமின்றி கேரளாவிலும் அவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்பதும் கேரளா சூப்பர் ஸ்டார் படங்களுக்கு இணையாக விஜய் படங்களும் கேரளாவில் சூப்பர் ஹிட்டாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விஜய்க்கு கர்நாடக மாநிலத்திலும் கன்னட ரசிகர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கன்னட ரசிகர்கள் விஜய்யின் முழு உருவச்சிலை ஒன்றை வடிவமைத்து அவரது அலுவலகத்திற்கு கொண்டு வந்துள்ளனர்

சென்னையை அடுத்த பனையூர் என்ற பகுதியில் உள்ள விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக நடிகர் விஜய்யின் முழு உருவச் சிலையை கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் விஜய் ரசிகர்கள் பரிசளித்துள்ளார்கள். கன்னட ரசிகர்களால் வழங்கப்பட்ட இந்த சிலை அவரது அலுவலகத்திலேயே வைக்கப்படும் என்றும் தகவல் வெளியிட்டுள்ளன

நடிகர் விஜய்யின் முழு உருவச்சிலை குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News