செப்டம்பரில் கெளதம் மேனனின் அடுத்த படம் ரிலீஸா?

செப்டம்பரில் கெளதம் மேனனின் அடுத்த படம் ரிலீஸா?

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கௌதம் மேனன் இயக்கிய ’என்னை நோக்கி பாயும் தோட்டா’ என்ற திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது என்பதும், இதனை அடுத்து அவரது இயக்கத்தில் முழு நீள திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவர் இயக்கி முடித்துள்ள திரைப்படம் ஒன்று வரும் செப்டம்பரில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் வருண் முக்கிய வேடத்தில் நடித்த ’ஜோஸ்வா இமைபோல் காக்க’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்தது. இதனை அடுத்து இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தை வரும் செப்டம்பரில் ரிலீஸ் செய்ய இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஹீரோவாக வருண் நடித்திருக்கும் இந்த படத்தில் ’கழுகு’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த கிருஷ்ணா வில்லனாக நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தில் நாயகியாக ராஹே என்பவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிம்பு நடிக்கும் ’நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க கௌதம் மேனன் திட்டமிட்டு உள்ளார் என்பதும் இந்த படத்தையும் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கௌதம் மேனன் இயக்கி முடித்துள்ள ’துருவ நட்சத்திரம்’ என்ற திரைப்படமும் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News