ஹீரோவை விட அதிக சம்பளம் வாங்கும் லிங்குசாமி பட வில்லன்!
இயக்குனர் லிங்குசாமி இயக்கி வரும் புதிய திரைப்படத்தில் ஹீரோவை விட வில்லனுக்கு அதிக சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நீண்ட இடைவெளிக்கு பின்னர் இயக்குனர் லிங்குசாமி தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடித்து வரும் திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழ் தெலுங்கு திரையுலகில் ஹீரோவாக நடித்து வந்த ஆதி இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என நேற்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இதற்காக அவருக்கு ரூபாய் 4 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் ஹீரோ ராம் பொத்தினேனிக்கு அதை விட குறைந்த சம்பளம்தான் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் வில்லன் கேரக்டர் பவர்புஃல்லாக இருக்கும் என்பதால் ஹீரோ ஒருவரைத்தான் வில்லனாக நடிக்க வைக்க வேண்டும் என்று படக்குழுவினர் முடிவு செய்தனர் என்பதும் மாதவன், ஆர்யா உள்பட ஒரு சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தற்போது ஆதி ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.