10 நாட்களில் பரிமளா & கோ திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
பரிமளா & கோ
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம் மற்றும் ஊர்வசி இணைந்து நடித்து கடந்த 5-ஆம் தேதி வெளியானது பரிமளா & கோ திரைப்படம்.

டார்க் காமெடி திரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படத்தில் சஞ்சனா, அனந்திகா, மிஸ்கின், சாண்டி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். FoxN இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வசூல்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான பரிமளா & கோ திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. ரசிகர்கள் ஏமாற்றமடைந்ததன் காரணமாக எதிர்பார்க்கப்பட்ட வசூலும் வரவில்லை.
இந்த நிலையில், 10 நாட்களை கடந்திருக்கும் பரிமளா & கோ திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 10 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 15.5 கோடி வசூலித்துள்ளது.