ஹாட்ஸ்டாரில் இருந்து சன் டிவிக்கு மாறிய விஜய்சேதுபதி படம்: விநாயகர் சதுர்த்தி ரிலீஸ்!

ஹாட்ஸ்டாரில் இருந்து சன் டிவிக்கு மாறிய விஜய்சேதுபதி படம்: விநாயகர் சதுர்த்தி ரிலீஸ்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் ஒன்றின் ஓடிடி ரிலீஸ் உரிமையை ஹாட்ஸ்டார் வாங்கி இருந்த நிலையில் தற்போது அந்த படம் சன் டிவிக்கு சென்று விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று சன் டிவியில் ஒளிபரப்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், டெல்லி பிரசாத் தீனதயாளன் என்பவர் இயக்கிய திரைப்படம் ’துக்ளக் தர்பார்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாரானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை ஹாட்ஸ்டார் பெற்று இருந்தது என்பதும் விரைவில் இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸாகும் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது திரையரங்குகளில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்யும் நிலைமை இல்லாததால் ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் சன் டிவி இந்த திரைப்படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமையை பெற்றுள்ளதாகவும், எனவே இந்த படம் ஹாட்ஸ்டாரில் இருந்து தற்போது சன் டிவிக்கு மாறி உள்ளதாகவும் இந்த திரைப்படம் வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி ஜோடியாக ராஷிகண்ணா நடித்திருக்கும் இந்த படத்தில் பார்த்திபன், மஞ்சிமா மோகன், காயத்ரி, பகவதி பெருமாள், கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைப்பில் உருவான இந்த படம் இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES