நீச்சல் குளத்தில் ஷங்கர் பட நாயகி; வைரல் புகைப்படங்கள்

நீச்சல் குளத்தில் ஷங்கர் பட நாயகி; வைரல் புகைப்படங்கள்

ஜெயம் ரவி திரையுலகில் அறிமுகமான ’ஜெயம்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை சதா. இதனை அடுத்து அவர் ஷங்கரின் ’அந்நியன்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்தார் என்பதும் இந்த படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்பட பல மொழிகளில் நடித்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு ’டார்ச்லைட்’ என்ற திரைப்படத்தில் சதா, அதன் பின்னர் அவர் வேறு படங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சதா, இன்ஸ்டாகிராமில் மட்டும் ஆயிரக்கணக்கில் ஃபாலோயர்களை வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது. அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வரும் அவர் சமீபத்தில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்கள் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES