ஓடிடி-யில் வெளியாகும் நரகாசூரன் - வெளியான ரிலீஸ் தேதி

ஓடிடி-யில் வெளியாகும் நரகாசூரன் - வெளியான ரிலீஸ் தேதி

துருவங்கள் 16 படத்துக்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான படம் 'நரகாசூரன்'.

அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா, ஆகியோர் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சில பிரச்சனைகள் காரணமாக, நீண்ட நாட்களாக இப்படம் வெளியாகாமல் உள்ளது. பல முறை இந்தப் படத்தின் வெளியீடு குறித்து அறிவிக்கப்பட்டு, ஒத்தி வைக்கப்பட்டது.

இறுதியாக ஓடிடி வெளியீட்டுக்கும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி வெளியீடு உறுதியாகி உள்ளதாம்.

அதன்படி இப்படம் வருகிற ஆகஸ்ட் 13ஆம் தேதி நேரடியாக சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News