சீனுராமசாமியின் அடுத்த படத்தின் ஹீரோ இந்த பிரபலமா?

சீனுராமசாமியின் அடுத்த படத்தின் ஹீரோ இந்த பிரபலமா?

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சீனுராமசாமி, ‘தென்மேற்கு பருவக்காற்று’ என்ற திரைப்படத்தை இயக்கி தேசிய விருது பெற்றார் என்பது தெரிந்ததே. மேலும் ’நீர்பறவை’ ’இடம் பொருள் ஏவல்’ ’தர்மதுரை’ ’கண்ணே கலைமானே’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர் தற்போது அடுத்த படத்திற்கான பணிகளில் இருக்கிறார்.

சீனுராமசாமி இயக்கும் அடுத்த படத்தில் நாயகனாக ஜிவி பிரகாஷ் நடிப்பார் என செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் கதை மதுரை மற்றும் அதைச்சுற்றியுள்ள நிகழ்வுகளை கொண்டது என்றும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஜிவி பிரகாஷ் படத்தை முடித்துவிட்டு அதனை அடுத்து விஜய் சேதுபதி நடிக்கும் படத்தையும் சீனு ராமசாமி இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷ் தற்போது சுமார் 10 படங்களுக்கு மேல் நடித்து கொண்டிருக்கும் நிலையில் மேலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES