ராகவா லாரன்ஸ், வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் - என்னவென்று தெரியுமா

ராகவா லாரன்ஸ், வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் - என்னவென்று தெரியுமா

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘அதிகாரம்’.

எதிர் நீச்சல், காக்கிசட்டை, கொடி, பட்டாசு போன்ற வெற்றி படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் கதை, திரைக்கதை அமைத்து வசனம் எழுதுகிறார்.

இந்நிலையில், ‘அதிகாரம்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா படத்தின் மூன்று பாகங்கள், சிவலிங்கா போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ள தமன், தற்போது 5 வது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார்.

LATEST News

Trending News