நடிகர் ரஹ்மான் வீட்டில் ஏற்பட்ட சோகம்- கடும் துக்கத்தில் நடிகரின் குடும்பம்
கொரோனா நோய் பிரச்சனை ஆரம்பித்ததில் இருந்து நிறைய பிரபலங்களின் மரண செய்தியை நாம் கேட்டு வருகிறோம்.
அப்படி இப்போதும் ஒரு பிரபலத்தின் வீட்டில் மரணம் நிகழ்ந்துள்ளது. நடிகர் ரஹ்மானின் தாயார் சாவித்ரி நாயர் நேற்று ( புதன்கிழமை ) மாலை 3.35 மணியளவில் பெங்களூரில் உயிரிழந்துள்ளார்.
அவரின் இறுதி சடங்குகள் இன்று சொந்த ஊரான கேரளாவில் நடக்க உள்ளது.
அண்மையில் ரஹ்மான் அவரது மனைவி, மகள்கள் இருவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர், அந்த புகைப்படங்களும் வெளியாகி இருந்தது.