பிரமாண்ட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் கார்த்திக் சுப்ராஜ் - இது வேற லெவல் காம்போ
விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான பீட்சா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ்.
இதையடுத்து பல வெற்றி படங்களை கொடுத்த இவர் சமீபத்தில் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தையும் இயக்கி இருந்தார்.
தற்போது விக்ரம் - துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் ‘சியான் 60’ படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், பிரமாண்ட இயக்குனர் சங்கருடன் கூட்டணி அமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் சங்கர் அடுத்ததாக ராம்சரணை வைத்து இயக்க உள்ள தெலுங்கு படத்திற்கு, கார்த்திக் சுப்புராஜ் தான் கதை எழுதி உள்ளாராம்.
இது முழுக்க முழுக்க அரசியல் கதை என கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
