துள்ளி குதித்து பலூன் விளையாடும் சமந்தா: பார்ட்னர் யார் தெரியுமா?

துள்ளி குதித்து பலூன் விளையாடும் சமந்தா: பார்ட்னர் யார் தெரியுமா?

தமிழ் திரையுலகில் திருமணத்திற்கு பின்னரும் வெற்றிகரமான நாயகியாக தொடர்ந்து கொண்டிருக்கும் மிகச் சில நடிகைகளில் ஒருவர் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு நாகார்ஜுனன் மகனை திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிய போதிலும் அவருக்கு தொடர்ச்சியாக வெற்றி படங்கள் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2010ஆம் ஆண்டு ’பானா காத்தாடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சமந்தா அதன் பின் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், விஷால் உள்பட பல பிரபலங்களுடன் நடித்துள்ளார் என்பதும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பல திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் விக்னேஷ் சிவனின் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ மற்றும் ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சமந்தாவுக்கு 17 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் விடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துள்ளி குதித்து பலூன் விளையாடும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அவருக்கு பார்ட்னராக அவர் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டியும் அவருடன் விளையாடுகிறது. இந்த வீடியோ பதிவு செய்து ஒரு மணி நேரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் 5 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News