10 வருடத்திற்கு பிறகு முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் நடிகை ஹன்சிகா - யாருடன் தெரியுமா

10 வருடத்திற்கு பிறகு முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் நடிகை ஹன்சிகா - யாருடன் தெரியுமா

தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் நடிகை ஹன்சிகா.

இவர் தற்போது `மஹா' என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சிம்பு கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.  இப்படத்தை தொடர்ந்து, மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில், 10 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க உள்ளாராம்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்தில் மூன்று ஹீரோயின்களாம், அதில் ஒருவராக ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

நடிகை ஹன்சிகா ஏற்கனவே கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான மாப்பிள்ளை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES