அஜித்தின் 'வலிமை' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எந்த நாட்டில்?

அஜித்தின் 'வலிமை' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எந்த நாட்டில்?

தல அஜித் நடித்துவரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படபிடிப்பு எங்கே என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

அஜித்தின் ‘வலிமை’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்உ கிழக்கு ஐரோப்பாவில் நடைபெற இருப்பதாகவும் இதற்காக அஜித் உள்பட படக்குழுவினர் இன்னும் ஒரு சில நாட்களில் ஐரோப்பாவுக்கு செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கிழக்கு ஐரோப்பாவில் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு 10 நாட்கள் நடைபெறும் என்றும் அத்துடன் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் ஏற்கனவே பாதிக்குமேல் முடிந்துவிட்டதாகவும் மீதி உள்ள போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்து வரும் தீபாவளி தீபாவளி அன்று ‘வலிமை’ படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளதை அடுத்து மீண்டும் ஒருமுறை ரஜினி - அஜித் படங்கள் போதுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்

அஜித் ஜோடியாக ஹூமா குரேஷி நடித்துள்ள இந்த படத்தில் யோகிபாபு, புகழ், கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர் என்பதும் யுவன்சங்கர்ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News