13 வயது மாற்றுத்திறனாளி சாதனை சிறுவனுக்கு வாய்ப்பு அளித்த டி.இமான்!

13 வயது மாற்றுத்திறனாளி சாதனை சிறுவனுக்கு வாய்ப்பு அளித்த டி.இமான்!

கேரளாவைச் சேர்ந்த 13 வயது மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு தான் இசையமைக்கும் படத்தில் பாட வாய்ப்பு அளித்துள்ள இசையமைப்பாளர் டி இமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

கேரளாவில் உள்ள கொல்லம் என்ற பகுதியைச் சேர்ந்த சிறுவர் ஆதித்யா சுரேஷ். பிறப்பிலிருந்தே மாற்று திறனாளியாக இருந்த நிலையில் அவரது இசைத் திறமை பல இடங்களில் வெளிப்பட்டுள்ளது. முதலில் சமூக வலைதளங்கள் பாடியவர் அதன்பின் புகழ்பெற்று கேரளாவில் நடைபெற்ற பல மேடை நிகழ்ச்சிகளில் பாடி உள்ளார். இந்தியா முழுவதும் சுமார் 400 நிகழ்ச்சிகளில் பாடி உள்ள இவர் வெளிநாட்டிலும் பாடுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது

இந்த நிலையில் சிறுவர் ஆதித்யா சுரேஷின் இசைத்திறமை குறித்து கேள்விப்பட்ட இசையமைப்பாளர் டி இமான் தான் இசையமைக்கும் அடுத்த படத்தில் ஒரு பாடலை பாடுவதற்காக அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். இந்த பாடலை ஆதித்யா சுரேஷ் மற்றும் சிறுமி சஹானா ஆகிய இருவரும் இணைந்து பாடுகின்றனர் என்றும், என். ராகவன் இயக்கத்தில், ரமேஷ் பிள்ளை தயாரிப்பில் பிரபுதேவா நடிக்கும் இன்னும் டைட்டில் வைக்கப்படாத படத்தில் இந்த பாடல் இடம்பெறுவதாகவும் டி இமான் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுளார். இதனையடுத்து சமூக வலைத்தள பயனாளிகள் டி இமானுக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES