அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்குது: கணவர் குறித்து சீரியல் நடிகையின் ஷாக்கிங் தகவல்!

அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்குது: கணவர் குறித்து சீரியல் நடிகையின் ஷாக்கிங் தகவல்!

தனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக சீரியல் நடிகை ஒருவர் பேட்டி கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று ’பாவம் கணேசன்’. இந்த சீரியலில் ’கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த நவீன் நாயகனாகவும் மற்றும் பலரும் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த தொடரில் சித்ரா என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை விலாசினி. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது கசப்பான திருமண வாழ்வு குறித்தும், கணவர் செய்யும் கொடுமைகள் குறித்தும் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருமண வாழ்வைப் பொறுத்தவரை தான் ஏமாந்துவிட்டதாகவும் தனது கணவர் சபரி ஞானபிரகாஷ் தனக்கு மட்டுமின்றி தனது குடும்பத்தினருக்கும் தொல்லை தருவதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். திருமணத்துக்கு முன்புவரை அவர் இவ்வளவு மோசமானவர் என்று தனக்கு தெரியாது என்றும், திருமணத்திற்குப் பின்னர் தான் அவருடைய உண்மைகளை ஒவ்வொன்றாக நான் கண்டுபிடித்தேன் என்றும், அவர் பல பேருடன் மோசடி வேலைகளில் ஈடுபடுகிறார் என்றும் அது மட்டுமின்றி பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருக்கிறது என்றும் விலாசினி கூறியுள்ளார்.

இதனால் தான் கணவரை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்து விட்டேன் என்றும் என்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவரை விட்டு விலகுவது மட்டுமே என்னுடைய வாழ்க்கைக்கு நல்லது என்று முடிவு செய்திருக்கிறேன் என்று விலாசினி தெரிவித்துள்ளார். இவர் இசைஞானி இளையராஜாவின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News