அஜித் பாணியில் நிவேதா பெத்துராஜ்: வைரல் புகைப்படங்கள்

அஜித் பாணியில் நிவேதா பெத்துராஜ்: வைரல் புகைப்படங்கள்

’ஒரு நாள் கூத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் அதன்பிறகு ’டிக் டிக் டிக்’ ’சங்கத்தமிழன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார் என்பதும் தற்போது அவர் ’பொன்மாணிக்கவேல்’ ’பார்ட்டி’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நிவேதா பெத்துராஜ் கார் ஓட்டுவதில் அலாதி விருப்பம் உள்ளவர் என்பதும், அவர் ஏற்கனவே தனது சமூக வலைத்தளத்தில் கார் ஓட்டியது குறித்த புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டார் என்பதும் குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் தற்போது ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டு வரும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இது என்னுடைய மற்றொரு முயற்சி என்றும், மற்றொரு கனவு என்றும் மற்றொரு வாழ்க்கை என்றும் அவர் இந்த பதிவுக்கு கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளார். விரைவில் அஜித் போலவே நிவேதா பெத்துராஜ் கார் ரேஸில் கலந்து கொண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES