முதல்முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட மியா ஜார்ஜ், கியூட்டான போட்டோ
தமிழ் சினிமாவிற்கு அமர காவியம் என்ற படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ்.
அதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து , எமன் உள்ளிட்ட படங்களில் நடித்து மியா ஜார்ஜ் பிரபலமானார்.
மேலும் இவருக்கும், கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் அஸ்வின் பிலிப்புக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் இவர்களுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை மியா ஜார்ஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் குழந்தைக்கு லுகா ஜோசப் பிலிப் என்று பெயர் வைத்துள்ளதையும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். லைக்ஸ்களை அள்ளும் அந்த புகைப்படத்தை பாருங்கள்.
