கணவருடன் நெருக்கமான ரொமான்ஸ்: நடிகை ஸ்ரேயா சரண் வீடியோ வைரல்!

கணவருடன் நெருக்கமான ரொமான்ஸ்: நடிகை ஸ்ரேயா சரண் வீடியோ வைரல்!

கணவருடன் நெருக்கமாக ரொமான்ஸ் செய்யும் வீடியோக்களை நடிகை ஸ்ரேயா சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோக்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சிவாஜி’ விக்ரம் நடித்த ’கந்தசாமி’ தனுஷ் நடித்த ’திருவிளையாடல் ஆரம்பம்’ உள்பட பல தமிழ் திரைப்படங்களிலும் தெலுங்கு ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை ஸ்ரேயா சரண் என்பதும், தற்போது அவர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் ’ஆர்.ஆர்.ஆர்’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ஸ்ரேயா சரண் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் அடிக்கடி வெளிநாடு சென்று எடுத்துக் கொள்ளும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் ஸ்ரேயா சரண் தனது கணவருடன் படகில் செல்லும் போது எடுக்கப்பட்ட நெருக்கமான ரொமான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோவில் அவர் தனது கணவரிடம் ’நான் செய்யும் எந்த விஷயம் உங்களுக்கு தொந்தரவாக இருக்கும்’ என்று கேட்க அதற்கு அவரது கணவர், ‘உன்னுடைய போனில் அதிக ஸ்பேஸ் இல்லை என்று நீ கூறுவது தான்’ என்று பதிலளிக்க இருவரும் சிரிக்கும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோவுக்கு ஸ்ரேயா சரண் ’ஜஸ்ட் லைக் தட்’ என்ற கேப்ஷனை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News