நான் கர்ப்பமாக இல்லை.. யாரும் மூக்கை நுழைக்க வேண்டாம் ! ஆவேசத்துடன் கிழி கிழினு கிழித்த பாடகி சின்மயி
பாடகி சின்மயி தான் கர்ப்பமாக இருப்பதாக பரவிய வதந்திகளுக்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பாடகி சின்மயி தொடர்ந்து சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்தாலும், குடும்பம் தொடர்பான எந்தவொரு விஷயத்தையும் பொதுவெளியில் வெளியிட்டதில்லை.
இந்நிலையில், சின்மயி கர்ப்பமாக உள்ளதாக சில யூடியூப் சேனல்களில் தகவல்கள் வைரலாக பரவி வருகின்றன.
தன்னைப் பற்றி இப்படியொரு வதந்தி சமூக வலைதளங்களில் உலாவி வருவதை அறிந்த பாடகி சின்மயி, தான் கர்ப்பமாக இல்லை என்றும், பொய்யான செய்திகளை தயவு செய்து யாரும் பரப்ப வேண்டாம் என்றும் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் மூக்கை நுழைக்க வேண்டாம் எனவும் விளாசி உள்ளார்.
மேலும், அப்படியே குழந்தை பிறந்தாலும் அதன் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் ஒரு போதும் பகிர மாட்டேன் என்றும், தனது திருமண புகைப்படங்களை கூட தான் எப்போதும் வெளியிடவில்லை என்றும் கூறியுள்ளார்.
எங்கள் குழந்தைகளையும் கண்டிப்பாக சமூக வலைதளங்கள் பக்கமே அனுமதிக்க மாட்டோம் என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார். சமூக வலைதளத்தில் பிரபலங்களுக்கு கொடுக்கப்படும் சீண்டல்கள் காரணமாகவே இப்படியொரு முடிவுக்கு வந்துள்ளார் பாடகி சின்மயி.