தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தில் முன்னணி பாலிவுட் நடிகர் - ரசிகர்களுக்கு ஷாக்கிங் சப்ரைஸ்

தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தில் முன்னணி பாலிவுட் நடிகர் - ரசிகர்களுக்கு ஷாக்கிங் சப்ரைஸ்

நடிகர் விஜய்யின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் பீஸ்ட். நெல்சன் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். 

மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது முடிந்தது.

கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்நிலையில், விஜய்யின் பீஸ்ட் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

இந்த கூட்டணி உறுதியானால், விஜய், ஷாருக்கான் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES