வெற்றிமாறன் இயக்கத்தில் கமல்ஹாசன்: தயாரிப்பாளர் யார் தெரியுமா?

வெற்றிமாறன் இயக்கத்தில் கமல்ஹாசன்: தயாரிப்பாளர் யார் தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி நடித்து வரும் ’விடுதலை’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை முடித்தவுடன் அவர் சூர்யா நடிக்கும் ’வாடிவாசல்’ என்ற படத்தை இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி கமல்ஹாசன் படத்தை வெற்றிமாறன் இயக்க இருப்பதாகவும், இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தேசிய விருது பெற்ற நடிகர் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணையும் போது மிகப் பெரிய அளவில் இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்றும் இந்த படத்திற்கு இருவருக்கும் மீண்டும் தேசிய விருது கிடைத்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் கோலிவுட் திரையுலகினர் கூறிவருகின்றனர் மேலும் இந்த படம் கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செல்வன் தயாரிப்பு என்பதால் விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசன் ஏற்கனவே ’இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார் என்பதும். அதுமட்டுமின்றி ’விக்ரம்’ மற்றும் ’பாபநாசம்’ ஆகிய இரண்டு படங்களில் நடிக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே.

LATEST News

Trending News