த்ரிஷ்யம் 2 தமிழ் ரீமேக்கில் நடிக்க போவது யார்? முதல் முறையாக கமலுடன் இணையும் நடிகை
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் நேரடியாக ஓடிடி யில் வெளியான திரைப்படம் த்ரிஷ்யம் 2.
இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துள்ளது. விரைவில் இப்படம் வெளியாகும் என தெரிவிக்கின்றனர்.
அதே போல் இப்படத்தின் தமிழ் ரீமேக் பாபநாசம் 2 படப்பிடிப்பு எப்போது துவங்கும், படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் கூடியுள்ளது.
அந்த வகையில் விக்ரம் படத்திற்கு முன்னரே, பாபநாசம் 2 படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட கமல் திட்டமிட்டுள்ளாராம்.
மேலும் இப்படத்தில் நடிகை கௌதமிக்கு பதிலாக, நடிகை நதியா நடிக்க பெரிதும் வாய்ப்புகள் உண்டு என தெரிவிக்கின்றனர்.
இதன்முலம் இதனை ஆண்டு காலம் இணைந்து நடிக்காமல் இருந்து கமல், நதியா முதல் முறையாக இப்படத்தில் இணையவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.