'பீஸ்ட்' படத்திற்காக களத்தில் இறங்கினார் பூஜா ஹெக்டே! வைரல் புகைப்படம்!

'பீஸ்ட்' படத்திற்காக களத்தில் இறங்கினார் பூஜா ஹெக்டே! வைரல் புகைப்படம்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’பீஸ்ட்’. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது

இந்த படப்பிடிப்பில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே கலந்து கொள்ளும் காட்சிகள் படமாக்கப்படும் என்றும் குறிப்பாக பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது என்றும் செய்திகள் கசிந்துள்ளது. இதற்காக பிரமாண்டமான செட் ஒன்று தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ’பீஸ்ட்’ படத்திற்காக டான்ஸ் ரிகர்சல் செய்து வருவதாக புகைப்படங்களுடன் ஒரு தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவல் விஜய் ரசிகர்களை ஆச்சரியத்தில் உள்ளது. எனவே அடுத்த கட்ட படப்பிடிப்பில் பூஜா கலந்து கொள்வது உறுதி என்று தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த புகைப்படமும் தற்போது வைரல் ஆகி வருகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES