'மாஸ்டர்' மாளவிகாவுக்கு டப்பிங் கொடுத்தது இந்த நடிகையா?

'மாஸ்டர்' மாளவிகாவுக்கு டப்பிங் கொடுத்தது இந்த நடிகையா?

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. முதலில் திரையரங்கிலும் அதன்பின் ஓடிடியிலும் ரிலீசான இந்த படம் ரூபாய் 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து இருப்பார் என்பதும் இந்த படத்தின் வெற்றி காரணமாக அவருக்கு தனுஷ் படம் உள்பட பல திரைப்படங்களில் வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்தின் தமிழ் பதிப்பில் மாளவிகா மோகனனுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீனா ரவி குரல் கொடுத்து இருப்பார் என்பது பலருக்கும் தெரிந்ததே. ஆனால் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் மலையாள பதிப்பிற்கு டப்பிங் கொடுத்தது ஒரு பிரபல நடிகை என்று தகவல் வந்துள்ளது.

பிரபல சினிமா மற்றும் சின்னத்திரை நடிகையும் டப்பிங் கலைஞருமான சுஜிதா தான் மாளவிகாவுக்கு ’மாஸ்டர்’ படத்தின் மலையாள பதிப்பிற்கு டப்பிங் கொடுத்துள்ளார். இதனை அவரே தனது யூடியூப் சேனலில் குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்துள்ளது.

LATEST News

Trending News