நயன்தாராவுக்கு வில்லனாக நடிக்கின்றாரா பிரபல ஹீரோ?

நயன்தாராவுக்கு வில்லனாக நடிக்கின்றாரா பிரபல ஹீரோ?

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கும் திரைப்படத்தில் பிரபல ஹீரோ ஒருவர் வில்லனாக நடிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ’அண்ணாத்த’ விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ’காற்றுவாக்கில் இரண்டு காதல்’ மற்றும் ’நெற்றிக்கண்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஃபேஷன் ஸ்டுடியோ என்ற நிறுவனத்திற்காக இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது

இதில் ஒரு திரைப்படம் அறிமுக இயக்குனர் ஒருவரால் இயக்கப்பட இருப்பதாகவும் இந்த படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் கேரக்டர் என்பதால் நயன்தாரா கேரக்டர் அட்டகாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் நாயகிக்கு இணையாக வில்லன் கேரக்டரும் இருப்பதால் பிரபல ஹீரோ ஒருவரை தான் வில்லன் வேடத்தில் நடிக்க வைக்க வேண்டும் என இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும், இதனை அடுத்து பிரபல கன்னட ஹீரோ சுதீப் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே சுதீப், எஸ்எஸ் ராஜமௌலியின் ‘நான் ஈ, தளபதி விஜய்யின் ’புலி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நயன்தாரா நடித்த ’இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தில் அனுராக் காஷ்யப் அனுராக் என்ற பிரபலம் வில்லனாக நடித்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பிரபலம் அவருக்கு வில்லனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News