கார்த்தி ஜோடியாக நடிக்கின்றாரா சிம்ரன்?

கார்த்தி ஜோடியாக நடிக்கின்றாரா சிம்ரன்?

கார்த்தி நடித்த ’சுல்தான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’சர்தார்’ என்ற திரைப்படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் ’சர்தார்’ படத்தில் கார்த்திக் இரண்டு வேடத்தில் நடித்து வருவதாகவும் ராஷி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் ஆகிய இருவரும் நாயகிகளாக இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் ஏற்கனவே தகவல்கள் இருந்தது. அதே போல் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தில் சிம்ரன் இணைய இருப்பதாக வெளிவந்த தகவல் குறித்து ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் கார்த்தி நடிக்கும் இரட்டை வேடத்தில் ஒரு வேடம் வயதான வேடம் என்றும் அந்த வேடத்திற்கு தான் சிம்ரன் ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சிம்ரன் ஏற்கனவே ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா உள்பட பல பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்த நிலையில் தற்போது கார்த்தியுடனும் ஜோடியாக நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஏற்கனவே சிம்ரன் தற்போது பிரசாந்த் நடித்து வரும் ’அந்தகன்’, விக்ரம் நடித்துவரும் ’சியான் 60’’ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES