ரம்யா பாண்டியனின் வேற லெவல் யோகா போஸ்: ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

ரம்யா பாண்டியனின் வேற லெவல் யோகா போஸ்: ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளின் போட்டியாளர்களின் ஒருவரான நடிகை ரம்யா பாண்டியன் கடந்த சில மாதங்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவல் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. குறிப்பாக கடற்கரையோரம் வெள்ளை உடை அணிந்து அவர் யோகா போஸ் கொடுத்ததும், அதன்பின்னர் அவர் வெளியிட்ட மேஜிக் ஆங்கிள் வீடியோவும் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் அவர் வேற லெவல் யோகா போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு அவர் கேப்டனாக, ‘ஒரு விஷயம் நான் புரிந்து கொண்டேன், போஸ் கொடுப்பது எளிது, ஆனால் அதை செய்வது மிகவும் கடினம், எனது யோகா குருவுக்கு நன்றி என பதிவு செய்துள்ளார்

ரம்யா பாண்டியனின் இந்த வேற லெவல் யோகா போஸ் கொண்ட புகைப்படத்தை அவர் பதிவு செய்த ஒரே மணி நேரத்தில் சுமார் ஒரு லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது என்பதிலிருந்தே இந்த புகைப்படம் எந்த அளவுக்கு இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.

இந்த நிலையில் தற்போது ரம்யா பாண்டியன், சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் திரைப்படம் உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES