தளபதி விஜய்யை வைத்து ஹாலிவுட் பட பாணியில் இயக்கவுள்ள மிஷ்கின்! ரசிகர்களை உற்சாகப்படுத்திய தகவல்

தளபதி விஜய்யை வைத்து ஹாலிவுட் பட பாணியில் இயக்கவுள்ள மிஷ்கின்! ரசிகர்களை உற்சாகப்படுத்திய தகவல்

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வெற்றியடைந்து வருகிறது. 

அந்த வகையில் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வந்தார்.

இப்படத்தின் போஸ்டர்கள் நேற்று தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது, எதிர்பார்த்ததை போலவே Beast படத்தின் போஸ்டர்கள் பெரிய வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் பிரபல இயக்குனர் மிஸ்கின் நேற்று ரசிகர்களுடன் ட்விட்டர் Space-ல் கலந்து கொண்டு உரையாடி வந்தார்.

அப்போது அவர் நடிகர் விஜய்யை வைத்து நான் இயக்கினால் அது ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரமாக தான் இருக்கும் என கூறியுள்ளார். இதனை தற்போது விஜய் ரசிகர்கள் இணையத்தில் பெரியளவில் பேசிவருகின்றனர். 

LATEST News

Trending News

HOT GALLERIES