ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரில் விஜய்: பிரபல இயக்குனர் தகவல்!

ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரில் விஜய்: பிரபல இயக்குனர் தகவல்!

ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரில் விஜய்யை நடிக்க வைப்பேன் என பிரபல இயக்குனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விஜய் இதுவரை 64 படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பதும் தற்போது அவர் நடித்து வரும் ’பீஸ்ட்’ திரைப்படம் 65வது படம் என்றும் தெரிந்தது. இந்த நிலையில் விஜய் இதுவரை ஜேம்ஸ்பாண்ட் பாணி கேரக்டரில் நடிக்கவில்லை என்பதால் அதுபோன்ற ஒரு கேரக்டரில் அவர் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இயக்குனர் கவுதம் மேனன் இதற்கான முயற்சி செய்தார் என்பதும், ‘யோகன் அத்தியாயம் ஒன்று’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள படத்தில் விஜய் ஜேம்ஸ்பாண்ட் போன்ற கேரக்டரில் நடிப்பதாக கூறப்பட்டது என்பதும், அந்த படத்தின் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென அந்தப் படம் டிராப் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய்யை ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரில் நடிக்க வைப்பேன் என இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். நேற்று அவர் டுவிட்டர் ஸ்பேஸில் ரசிகர்களுடன் உரையாடியபோது எனக்கு விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக அவருக்கு ஜேம்ஸ்பாண்ட் கேரக்டர் தான் கொடுப்பேன் என்றும் அந்த கேரக்டருக்கு அவர் தான் பொருத்தமானவர் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே விஜய்யை ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரில் நடிக்க வைக்க இயக்குனர் செல்வராகவன் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இயக்குநர் மிஷ்கினும் அதனையே தெரிவித்துள்ளார். எனவே விரைவில் விஜய் ஒரு ஜேம்ஸ்பாண்ட் பாணி படத்தில் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LATEST News

Trending News