தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது?

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது?

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி இணையத்தளங்களை ஸ்தம்பிக்க வைத்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ‘பீஸ்ட்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டு முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்று கூறப்பட்டது. ஆனால் திடீரென ஊரடங்கு உத்தரவு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தற்போது படப்பிடிப்புக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து ‘பீஸ்ட்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்கான பணிகள் ஆரம்பித்துவிட்டதாகவும் ஜூலை முதல் வாரம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ‘பீஸ்ட்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று படக்குழுவினர் இருந்து தகவல்கள் கசிந்துள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வரும் இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகை அபர்ணா தாஸ் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் யோகி பாபு, விடிவி கணேஷ் கணேஷ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் அடுத்த ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News