செல்வராகவன் படத்தை விட்டுவிட்டு, வேறொரு புதிய படத்தில் கமிட்டான நடிகர் தனுஷ்.. காரணம் என்ன
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் ஜகமே தந்திரம் திரைப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.
இதனை தொடர்ந்து தற்போது தனுஷ் நடிப்பில், கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.
இதன்பின் தனது அண்ணன் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ என்ற படத்தை தொடங்க திட்டமிட்டிருந்தார் தனுஷ்.
ஆனால் தற்போது தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில், தெலுங்கு தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் தனுஷ் கமிட்டாகியுள்ளார்.
இந்த படத்தில் ஒப்பு கொண்டதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கிறது. ஒன்று இது ஒரு PAN இந்தியா படம். மற்றொன்று, இப்படத்திற்காக ரூ. 30 கோடி வரை தனுஷுக்கு சம்பளம் தரப்பட்டுள்ளதாம்.
இதனால் முதலில் இந்த படத்தை முடித்துவிட்டு, அதன்பின் செல்வராகவன் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம் தனுஷ்.