மீண்டும் தனுஷுடன் இணையும் நடிகை சாய் பல்லவி - எந்த படத்தில் தெரியுமா

மீண்டும் தனுஷுடன் இணையும் நடிகை சாய் பல்லவி - எந்த படத்தில் தெரியுமா

நடிகை சாய் பல்லவி, பிரேமம் என்கிற மலையாள படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதன்பின் தமிழில் தியா, மாரி 2, என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்த வந்த இவர், தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.

இந்நிலையில் நடிகை சாய் பல்லவி மீண்டும் தனுஷுடன் இணைந்து நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம் நடிகர் தனுஷ் தெலுங்கில் அறிமுகமாகும் படத்தில், அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராக உள்ள இப்படத்தை பிரபல டோலிவுட் இயக்குனர் சேகர் கமுலா இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES