காதலருடன் சேர்ந்து போதைப்பொருள் பயன்படுத்திய தமிழ் நடிகை கைது!

காதலருடன் சேர்ந்து போதைப்பொருள் பயன்படுத்திய தமிழ் நடிகை கைது!

சமீபத்தில் வெளியான “மிருகா“ திரில்லர் திரைப்படத்தில் நடித்து இருந்தவர் நடிகை நைரா ஷா. இவர் காதலருடன் சேர்ந்து போதைப்பொருள் பயன்படுத்தியதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மும்பையில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து இருப்பவர் நடிகை நைரா ஷா. இவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுகிழமை அன்று மும்பை ஜுஹு பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தனது காதலர் ஆஷிக் சஜித்துடன் தங்கியுள்ளார். அப்போது நடிகை நைரா போதைப்பொருள் பயன்படுத்துவதாகப் போலீசாருக்கு தகவல் வந்ததாகவும் இதையடுத்து அதிகாலை 3 மணிக்கு நட்சத்திர ஹோட்டலில் சோதனை நடந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சோதனையில் நடிகை நைராவும் அவரது காதலர் ஆஷிக்கும் கைது செய்யப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். அந்த சோதனையில் நடிகை நைரா கஞ்சா பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் ஜாமீன் கிடைத்து வெளியே வந்ததாகவும் கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES