விஜய் சேதுபதியை நேரில் சந்தித்த ஃபேமிலி மேன் சீரிஸ் நடிகர் மனோஜ் பாஜ்பாய்! வெளியான சுவாரஸ்யமான தகவல்

விஜய் சேதுபதியை நேரில் சந்தித்த ஃபேமிலி மேன் சீரிஸ் நடிகர் மனோஜ் பாஜ்பாய்! வெளியான சுவாரஸ்யமான தகவல்

சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும், தமிழகத்தில் சர்ச்சையையும் ஏற்படுத்திய சீரிஸ் தி பேமிலி மேன்.

இதன் இரண்டு சீசன்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் மனோஜ் பாஜ்பாய், இவர் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகராக உள்ளார். 

இந்நிலையில் இவர் பேமிலி மேன் சீசன் 2 ஷூட்டிங்கிற்காக சென்னை வந்தபோது விஜய் சேதுபதியை சந்தித்தது குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது "நான் விஜய் சேதுபதியை அழைத்தபோது, அவர் உடனடியாக சந்திக்க ஒப்புக்கொண்டார். நாங்கள் ஒன்றாக நிறைய நேரம் செலவு செய்தோம்.

மேலும் என்னைப் பொறுத்தவரை சென்னை இதுதான்! மக்களை அறிவது, திரைப்படத் தயாரிப்பாளர்கள், நடிகர்களை சந்திப்பது, அந்த சிறிய குறுகிய பாதைகளுக்குச் செல்வது. சென்னையின் உண்மையான மனிதர்களைப் பார்க்க விரும்பினேன் " என கூறியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES