தொகுப்பாளினி திவ்யாவிற்கு அசிங்கமான வீடியோ அனுப்பிய நபர்- பிரபலம் செய்த அதிரடி
நாட்டில் அதிகம் மோசமான விஷயங்கள் நிறைய நடக்கின்றன. அதிலும் நடிகைகள் பலரும் சமூக வலைதளங்களால் பல மோசமான விஷயங்களை எதிர்கொள்கின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானவர் தொகுப்பாளினி திவ்யா.
அடுத்தடுத்து நிறைய நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கிய அவர் திடீரென கேமரா முன் வருவதை நிறுத்தினார். தறபோது இவரின் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு நிறுவனத்தின் பெயரில் ஒருவர் மெசேஜ் செய்துள்ளார்.
அவரின் பதிவுகள் கொஞ்சம் சந்தேகமாக இருப்பதால் திவ்யா அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து மெயில் அனுப்ப கூறியுள்ளார். ஆனால் அந்த நபர் அசிங்கமான ஒரு வீடியோவை அனுப்பியுள்ளார்.
வீடியோ அனுப்பியதோடு இது திருப்தியாக உள்ளதா எனவும் கேட்டுள்ளார்.
திவ்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் யார் என்பதை வெளிக்காட்டியுள்ளார், மற்றவர்களையும் ஜாக்கிரதையாக இருக்க கூறியுள்ளார்.
இந்த கேவலமான நபர் யார் என்று தெரிந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தனக்கு உதவுமாறு கேட்டுள்ளார்.

