நடிகர் விக்ரமுடன் நடித்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை - அதுவும் இந்த படத்திலா
தமிழ் திரையுலகில் கடுமையான வேடத்தை, தனது உடலை வருத்திக்கொண்டு செய்பவர் நடிகர் விக்ரம்.
இவர் நடிப்பில் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.
நடிகர் விக்ரம் நடித்து வெளியான சில திரைப்படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறியுள்ளது.
அப்படி ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம், அனுஷ்கா, எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைப்படம் தாண்டவம்.
இப்படத்தில் விக்ரமுடன் இணைந்த பிரபல பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சுஜிதா, அபி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் தற்போது டாப் சீரியல்களில் ஒன்றாக ஓடிக்கொண்டு இருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் என்பது குறிப்பிடத்தக்கது.
