ஹிந்தியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு அதிகரிக்கும் மவுசு - தொடர்ந்து மூன்று முறை நடக்கும் விஷயம்..

ஹிந்தியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு அதிகரிக்கும் மவுசு - தொடர்ந்து மூன்று முறை நடக்கும் விஷயம்..

மாநகரம், கைதி, மாஸ்டர் என மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் வெற்றி இயக்குனராக வலம்வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

இவர் இயக்கிய முதல் படம் மாநகரம். இப்படத்தை இந்தியில் மும்பைகார் என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர்.

அதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி படமும் இந்தியில் ரீமேக் ஆகிறது.

லோகேஷ் கனகராஜின் மூன்றாவது படமான மாஸ்டரும் விரைவில் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது.

இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதில் விஜய் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் படங்களுக்கு ஹிந்தியில் மவுசு கூடியுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

LATEST News

Trending News