நிர்வாணமாக நடித்து ஆச்சர்யப்பட வைத்த ஆண்ட்ரியா

நிர்வாணமாக நடித்து ஆச்சர்யப்பட வைத்த ஆண்ட்ரியா

தமிழ் சினிமாவில் நடிகையாகவும், பின்னணி பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியா பிசாசு 2 படத்திற்காக ரிஸ்க் எடுத்து நடித்து இருக்கிறார்.

தமிழில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இதுவரை ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். பன்முக திறமைக்கொண்ட இவர் நடிப்பிலும் கலக்கி வருகிறார். மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, வடசென்னை, தரமணி, மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.  

ஆண்ட்ரியா நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் பிசாசு 2. மிஷ்கின் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு வெளியான பிசாசு படம் பெரிய வெற்றி பெற்றதையடுத்து அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கதைக்கு இந்த காட்சி மிகவும் அவசியம் என்பதால் ஆண்ட்ரியா இந்த காட்சியை சிறப்பாக நடித்து முடித்துகொடுத்தாராம். படத்திற்காக ஆண்ட்ரியாவின் இந்த ரிஸ்க் ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. அந்த குறிப்பிட்ட காட்சி எடுக்கப்படும்போது படப்பிடிப்பு தளத்தில் மிக குறைவான நபர்களே இருந்துள்ளனர். 

தமிழில் 2019 ஆம் ஆண்டு ஆடை படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவரை தொடர்ந்து தற்போது ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளார். 

LATEST News

Trending News

HOT GALLERIES