காதல் தோல்வி, புதிய உறவு குறித்து ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த நடிகை ரைசா

காதல் தோல்வி, புதிய உறவு குறித்து ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த நடிகை ரைசா

பிக்பாஸ் 1வது சீசன் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்திற்கு வந்தவர் நடிகை ரைசா.

கன்னட சினிமாவில் சில விளம்பரங்கள் நடிப்பது, மாடலிங் துறையில் பணிபுரிவது என இருந்து ரைசா பிக்பாஸ் மூலம் பெரிய ரீச் பெற்றார்.

அதன்பிறகு அவர் சில படங்கள் நடித்து வந்தார், நிறைய படங்கள் கமிட்டாகியும் உள்ளார். அண்மையில்  முகத்தை அழகுப்படுத்த சென்ற இடத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட செய்தியில் அதிகம் ரைசா பேசப்பட்டார்.

சமீபத்தில் ரசிகர்களுடன் இன்ஸ்டா பக்கத்தில் கலந்துரையாடினார். அப்போது அவரிடம் ஒரு ரசிகர் காதல் தோல்வி உள்ளதா என கேட்டுள்ளார்.

அதற்கு நடிகை ரைசா, 5 வருடத்திற்கு முன் காதல் தோல்வி ஏற்பட்டது, அதன்பிறகு நல்ல காதலுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என பதிவு செய்துள்ளார்.

LATEST News