கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் இணைந்த பிரபலங்கள்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் இணைந்த பிரபலங்கள்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவ் இணைவதாக லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் கமல்ஹாசன் மற்றும் அன்பறிவ் ஆகியோர்களுடன் தான் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் ஏற்கனவே தளபதி விஜய்யின் ‘தளபதி 65’ உள்ளிட்ட ஒருசில திரைப்படங்களில் தற்போது பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

‘விக்ரம்’ படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது என்பது தெரிந்ததே. அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகவிருக்கும் இந்த படத்திற்கு இளம் இசைப்புயல் அனிருத் இசையமைக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES