நேரடியாக ஓடிடி-யில் களமிறங்கும் பிரபு தேவாவின் திரைப்படம் - அதுவும் இந்த படமா
இந்திய திரையுலக அளவில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர், இயக்குனர், நடன இயக்குனருமான பிரபு தேவா.
இரவின் மிரட்டலான நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’.
ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி இருக்கும், இப்படத்தில் இதில் பிரபுதேவா முதல்முறையாக போலீசாக நடித்துள்ளார்.
பிரபு தேவாவிற்கு ஜோடியாக இப்படத்தில் நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்.
முழு படப்பிடிப்பு முடிந்தும் ரிலீசாகாமல் இருக்கும் இப்படம், விரைவில் நேரடியாக ஓடிடி-யில் வெளிவரவுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
இதற்கான பேச்சுவார்த்தையும் முடிந்துவிட்டதாகவும், இதுகுறித்த விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கின்றனர்.